Saturday, 26 October 2013

PAYPAL ACCOUNT ஐ உருவாக்குவது எப்படி?

online ல் நீங்கள் வேலை செய்யும் போது உங்களுக்கு சேர வேண்டிய தொகையானது பத்திரமாக வந்து வந்து சேர உதவக்கூடிய ஒரு online bank தான் PAYPAL .

இதன்மூலம் உங்களது பண பரிவர்த்தனைகளை செய்து கொள்ளலாம் . இதன் முக்கியம்சம் என்னவெனில் நீங்கள் வைத்திருக்கும் வங்கி கணக்கை இதனுடன் இணைத்து கொள்ளலாம் . இதன் மூலம் உங்கள் paypal account ல் உள்ள பணத்தை நேரடியாக உங்கள் வங்கி கணக்கிற்கு மாற்றலாம் .

புதிய account உருவாக்க www.paypal.com என்ற முகவரிக்கு செல்லவும்

இதில் get started now என்பதை கிளிக் பண்ணவும் . அடுத்தது business account ஐ select செய்யவும் .
அதில் தேவையான விவரங்களை கொடுத்து sign up  செய்யவும் . இப்பொழுது உங்களுடைய online பணப்பரிவர்த்தனைகளை சிரமமில்லாமல் பெற கணக்கு தயாராகிவிட்டது.

 இதில் உள்ள get verified என்பதை select செய்வதன் மூலம் உங்களது bank account ஐ paypal account உடன் இணைத்து கொள்ளலாம். 

Sunday, 20 October 2013

கணினியை பயன்படுத்தி சம்பாரிப்பது எப்படி ? (ONLINE PAID SURVEY)

நண்பர்களுக்கு வணக்கம்


இன்றைய நாட்களில் நாம் அதிக நேரத்தை செலவிடுவது  கணினியில் தான் . எனவே கணிணி யை பயன்படுத்தி நம்மால் சம்பாதிக்க முடியுமா என்ற கேள்வி எழுந்ததன் பேரில் , அதை நோக்கி பயணித்து கடைசியில் அதில் வெற்றியும் பெற்று , தற்பொழுது எந்த வித செலவும் இல்லாமல் சில மணி நேரங்கள் கணிணி யை பயன்படுத்தி சம்பாரிக்கும் முறையை கண்டறிந்துவிட்டேன்

ONLINE PAID SURVEY


இதை முதலில் கேள்விப்பட்டவுடன் நம்பிக்கை வரவில்லை . பின் என் நண்பர்கள் பலரிடம் தகவல்களை சேகரித்ததில் இதனை பற்றிய உண்மையான விபரங்களை தெரிந்துக்கொள்ள முடிந்தது.

   தேனியில்  உள்ள என் நண்பர் ஒருவர் படித்துக்கொண்டே தினமும் சிலமணி நேரங்கள் கணிணியை பயன்படுத்தி பல ஆயிரங்களை மாதம் சம்பாதிக்கிறார் .அவரிடம் கேட்டறிந்த பல தகவல்களை உங்களுக்கு தர இருக்கிறேன் .

இதில் ஏமாற்றுவதற்கு என்றே நிறைய நிறுவனங்கள் உள்ளன. அவ்வாறின்றி உழைப்பிற்கு ஏற்றார் போல் பயன்தரக்கூடிய பல நிறுவனங்கள் உள்ளன, அவை பற்றிய அனைத்து தகவல்களையும் உங்களுக்கு தருகிறேன் .

பொதுவாக online ல் வேலை செய்யும் போது நமக்கு சேர வேண்டிய பணமானது எவ்வாறு கிடைக்கும் என்பது பலரது கேள்வி . இது போன்ற வேளைகளில் பணபரிமாற்றத்திற்காக உருவாக்க பட்டதுதான் PAYPAL எனப்படும் website. இதைப்பற்றிய தகவல்களை அடுத்த பதிவில் காண்போம் 

Thursday, 19 September 2013

நன்றி தோழர்களே

  • நண்பர்களுக்கு எனது பணிவான வணக்கங்கள் ...

நமது " வெற்றி நிச்சயம் " முகநூல் பக்கமானது இப்பொழுது 100 விருப்பங்களைப்(LIKES) பெற்றுள்ளது . 
இது சாத்தியமானது உங்களால் மட்டுமே . தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் நல் உள்ளங்களுக்கு மிக்க நன்றி
இதுவரை கூறப்பட்ட சிறுதொழில்கள் போல் இன்னும் பல்வேறு வகையான தொழில்களின் விளக்கங்களுடன் உங்களை சந்திக்க காத்திருக்கிறேன் . மேலும் என்னால் இயன்ற அளவு துல்லிய விளக்கங்களை கொடுத்துகொண்டிருக்கிறேன் . நண்பர்கள் உங்களுக்கு தெரிந்த தொழில்களைப் பற்றியும் இங்கு கூறலாம்...
அது மற்றவர்களுக்கு நிச்சயமாக பயனுள்ளதாக இருக்கும்...
இங்கு கொடுக்கப்படும் தகவல்கள் பலநேரங்களில் என்னால் நேரிடையாகவும் , நண்பர்கள் மூலமும் பெறப்பட்டது . அவற்றில் ஏதானும் தவறு இருப்பின் உடனடியாக தெரியபடுத்தவும் . வெற்றியை நோக்கியே பயணிப்போம்

                                                        நன்றி தோழர்களே .....
like &  share our page   
www.facebook.com/businessinfo
*********************வெற்றி நிச்சயம் ***********************

Wednesday, 18 September 2013

பாக்கு மட்டை தொழில்



இது பாஸ்ட் புட் காலம். நின்று கொண்டே சாப்பிட்டுவிட்டு, சாப்பிட்ட தட்டையும் கழுவுவதற்கு நேரமில்லாமல் தட்டின் மீது பிளாஸ்டிக் தாளை வைத்துச் சாப்பிட்டுவிட்டு ஓடிக்கொண்டிருக்கும் யுகம். சாப்பிட தட்டும் வேண்டும்; அது ஒருமுறை பயன்படுத்திவிட்டுத் தூக்கி எறிந்து விடுமாறும் இருக்க வேண்டும்; அது சுற்றுச் சூழலுக்கு கேடுவிளைவிக்காததாகவும் இருக்க வேண்டும். இந்த மூன்று தேவைகளையும் நிறைவேற்றுவதாக இருக்கிறது பாக்கு மட்டை தட்டுகள்.

வீணாகக் குப்பையில் போடப்பட்டு வந்த பாக்குமட்டையிலிருந்து, சுற்றுச்சுழலைப் பாதிக்காத இத் தட்டுகள் கோயில்களில் பிரசாதம் வழங்க, விசேஷங்களில் சிற்றுண்டிகள் வழங்க எனப் பெருமளவில் பயன்படுத்தப்படுகிறது. விளைவு? வீணான பொருள் விலைமதிப்புக்குரிய பொருளாக மாறிவிட்டது.

எவ்வளவு முதலீடு :


4 இயந்திரங்களின் விலை ரூ. 80 ஆயிரமாகும். சொந்த இடத்திலேயே இரு அறைகள் கட்டி இயந்திரத்தை அமைக்கலாம்.மாவட்டத் தொழில் மையத்தில் பதிவு செய்தேன். அதன்மூலம், சிறுதொழில் எனச் சான்று பெற்று, மின் கட்டணச் சலுகை பெறலாம் . இந்த இயந்திரம் வாங்குவதற்கும், மூலதனப் பொருள்கள் வாங்குவதற்கும் காதி போர்டு மூலம் கடன் பெற்றால், 35 சதம் மானியம் கிடைக்கும்.

இதில் பல ரகங்கள் உள்ளன. நான்கு அளவுகளில் தயாரிக்கலாம் . 10, 8, 6 மற்றும் 4 அங்குலங்களில் தட்டுகள் தயாரிக்கலாம் .

இதற்கான மூலப்பொருட்கள் சேலம் மற்றும் தென்காசியில் கிடைக்கிறது.

தட்டுகளை எப்படி சந்தைப்படுத்துதல்:


சேலத்தில் உள்ள கிரீன் இண்டியா என்ற நிறுவனம்தான் இந்தத் தொழில் குறித்து பயிற்சி அளிக்ககிறது. இந்த நிறுவனத்தார் மூலப்பொருள்களையும் கொடுத்து, தயாரிக்கப்பட்ட தட்டுகளையும் வாங்கிக் கொள்கின்றனர். இவர்கள் பல கண்காட்சிகளில் பங்குபெற்று சந்தைப்படுத்தவும் உதவி வருகின்றனர் .

like & share our page www.facebook.com/businessinfo

அவர்களின் முகவரி உங்கள் தொடர்புக்கு ;
green india
.(+91) 98434 11319
# 11-A Rajaji Road
Salem - 636 007.
greenindiasalem.com

நாளுக்கு நாள் இதன்தேவை கூடிக்கொண்டே போகிறது. சுயதொழில் செய்ய விரும்பும் பலர் இதனைச் செய்ய முன்வரவேண்டும். ஆண்கள் துணையின்றி வீட்டுப் பெண்களே செய்யக் கூடிய தொழில் இது.
இந்தத் தொழில் குறித்து உங்கள் கருத்து என்ன ? வருமானம் பெருக வாய்ப்புள்ள தொழில். . பெண்களுக்கு ஏற்ற தொழில். இந்தத் தொழிலில் ஈடுபட்டால், சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதில் நாமும் பங்குகொள்கிறோம் என்ற உணர்வு ஏற்படும்.

like & share our page www.facebook.com/businessinfo


பாக்குமட்டை தட்டு தயாரிப்பு:


பாக்கு மட்டையை தண்ணீரில் சிறிது நேரம் ஊறவைத்த பிறகு, அதை நவீன தொழில் நுட்பத்துடன் அமைக்கப்பட்ட இயந்திரத்தில் வைக்கப்படுகிறது. இயந்திரம் மின்சார உதவியுடன் வெப்பமாகி பாக்கு மட்டை தட்டாக உருவாகிறது. 
வட்டம், சதுரம், செவ்வகம், ஐங்கோணம், அறுங்கோணம் ஆகிய வடிவங்களில் அச்சு முறையில் வடிவமைக்கப்படுகிறது. மிகவும் குறுகிய நேரத்தில் சாதாரணமாக 100 தட்டு வரை தயாரிக்கலாம். ஏற்கனவே புழக்கத்தில் இருந்த சதுர வடிவ தட்டுகள் மக்கள் மத்தியில் வரவேற்பை பெறவில்லை.
எனவே, உற்பத்தியாளர்கள் வடிவத்தை மாற்றி வட்ட வடிவத்திலும், அறுங்கோண வடிவத்திலும் மாற்றி விற்பனை செய்கிறோம். சீஸன் சமயத்தில் நாளொன்றுக்கு 3000 தட்டு வரை உற்பத்தி செய்யலாம். பாக்கு மட்டை உணவு தட்டுகளுக்கு வெளிநாடுகளிலும் நல்ல கிராக்கி மரத்தில் இருந்து உதிர்ந்து விழும் மட்டைகளை பதப்படுத்தி உணவுத் தட்டுகள் தயாரித்து விற்பனை செய்வதிலும் பாக்கு விவசாயிகள் ஆர்வம் காட்டினர். இதனால், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மட்டுமின்றி, வட மாநிலங்களிலும் பாக்கு தட்டுகளுக்கு மவுசு ஏற்பட்டது.
ஏற்றுமதிக்கு தொடர்ந்து ஆர்டர் கிடைத்ததால், பாக்கு தட்டு தயாரிக்கும் குடிசைத் தொழிலகங்களின் எண்ணிக்கை அதிகரித்தது. சேலம், நாமக்கல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பாக்கு தட்டு தயாரிக்கும் சிறு தொழில் அசுர வளர்ச்சி அடைந்தது. 400க்கும் மேற்பட்டோர் பாக்கு தட்டு தயாரிக்கும் தொழிலில் ஆர்வத்தோடு ஈடுபட்டனர்.
தற்போது பாக்கு தட்டுகள் மட்டுமின்றி, பாக்கு மட்டைகளை பதப்படுத்தி டீ கோப்பைகள், டம்ளர்கள், பல்வேறு வடிவ கிண்ணங்கள், சிற்றுண்டி பிளேட்டுகள் போன்றவற்றை தயாரிக்கும் புதிய முயற்சியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். இந்த பாத்திரங்களுக்கு ஆஸ்திரேலியா, ஐரோப்பிய நாடுகளில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
உள்ளூரில் உலா வந்த பாக்கு மட்டை தட்டுகளுக்கு, வளர்ந்த நாடுகளில் கடும் கிராக்கி ஏற்பட்டு ஏற்றுமதிக்கு ஆர்டர் குவிந்து வருவதால், விவசாயிகளும், வியாபாரிகளும் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

like & share our page www.facebook.com/businessinfo

பாக்கு மட்டை தட்டுகளின் செய்முறை :

பாக்குமட்டை தட்டுகள் நீங்கள் பார்த்துக்கொண்டிருக்கும் பாக்கு மரங்களின் மட்டைகளில் இருந்து தயரிக்கப்படுகிறது இவை முற்றிலும் இயற்கையான முறையில் தயாரிக்கப்படும் ஒரு பொருள் ஆகும் பாக்குமரங்களில் இருந்து மட்டைகள் மிகவும் கவனமாகப் பிரித்தெடுக்கப்பட்டு அவை சிறந்த கண்கணிப்புக்கு உட்படுத்தப்பட்டு சேமித்து பின் நன்னீரில் நனைத்து ஊறவைத்து அதனை முற்றிலும் மனிதர்களால் இயக்கப்படும் ஒரு எந்திரத்தில் வைத்து தேவையான அளவுகளில் வெட்டியும் பின் சுடச்செயதும் நமக்கு வேண்டிய வடிவத்தை தரும் வகையில் உருவாக்கபப்டுகிறது இதில் எந்தொரு இடத்திலும் செயற்கையான வண்ணங்களோ அல்லது மனமோ வேறு எந்த ஒரு ரசயனமோ இடப்படுவது இல்லை முற்றிலும் பணம் கொழிக்கும் பாக்குமட்டை தட்டு.

இயந்திரங்கள் :

பாக்கு மட்டை தட்டுகளைத் தயாரிக்கும் இயந்திரங்களை உற்பத்தி செய்து, அவற்றை சந்தைப்படுத்தி வரும் சேலத்தின் மிகப் பிரபலமான எஸ்.பி.எஸ். இன்ஜினியரிங் நிறுவன உரிமையாளர்கள் கூறியதாவது:எமது நிறுவனம் 1997 லிருந்து இந்த பாக்கு மட்டைத் தட்டு தயாரிக்கும் இயந்திரம் உற்பத்தி செய்து சந்தைப்படுத்தி வருகிறது. நாங்கள் முதன் முதலில் பெடல் டைப் மெசினை செய்து பார்த்தோம். பிறகு ஹேண்டில் டைப் மெசினை அறிமுகம் செய்தோம்.
பலர் கேட்டதால் ஆட்டோ மெசினை சேலத்தில் முதன் முதலாக அறிமுகப்படுத்தினோம். தற்போது தானாக இயங்கக்கூடிய ஆட்டோமெடிக் இயந்திரம் அறிமுகம் செய்துள்ளோம். இந்த ஆட்டோமேட்டிக் இயந்திரத்தை தமிழகத்தில் முதன் முறையாக நாங்கள் வடிவமைத்து சந்தைப்படுத்தியுள்ளோம். இந்த இயந்திரத்தில் பாக்கு மட்டையை வைத்து பட்டனை அழுத்தினால், தானாகவே இயங்கி தட்டு வடிவம் ஆனவுடன் தானாகவே இயங்கி தட்டுகள் வெளிவந்து விடும். மற்ற இயந்திரத்தை விட தட்டுகளை அழகாகவும், நேர்த்தியாகவும், விரைவாகவும் உற்பத்தி செய்யலாம்.
ஏற்றுமதி தரம் வாய்ந்த தட்டுகளாகவும், விருப்பத்திற்கேற்றவாறு லோகோ, போன், டிசைன் போன்றவற்றை எம்போசில் செய்யும் வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் உள்ள ஹீட்டர்களுக்கு டிஜிட்டல் டெம்ப்ரேச்சர் இண்டிகேட்டர் பொருத்தப்பட்டுள்ளதால் எவ்வளவு வெப்பம் வைக்கலாம் என்று உறுதி செய்யலாம். குறைந்த மின் செலவே போதுமானது. புதிதாக தொழில் தொடங்குவோருக்கு இந்த இயந்திரம் ஒரு வரப்பிரசாதம்.

எஸ்.பி.எஸ். இன்ஜினியரிங் ஒர்க்ஸ், சேலம்-8, மொபைல்97906 98985, 97912 03708 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.
****************வெற்றி நிச்சயம்********************
like & share our page www.facebook.com/businessinfo

Tuesday, 17 September 2013

தொழில் முனைவோருக்கான அறிய வாய்ப்பு

புதிய தலைமுறை அறக்கட்டளை சார்பில் மதுரையில் சுயதொழில் கருத்தரங்கம் நடைபெற இருக்கிறது. அக்டோபர் 4ம் தேதி ( 4.10.2013) அன்று காலை 9.30 மணி முதல் மாலை 5 மணி வரை, திருப்பரங்குன்றம் மதுரா கல்லூரியில் கருத்தரங்கம் நடைபெற இருக்கிறது.

கருத்தரங்கத்தில், சுயதொழில் புரிய விரும்புவர்கள் திட்ட அறிக்கை தயார் செய்வது எப்படி என்பது முதல் தயாரிப்புகளை சந்தைப் படுத்துதலில் இடர்பாடுகளை இனம் கண்டு தீர்த்தல் வரை பல்வேறு பொது தலைப்புகளில் விளக்கமாக நிபுணர்கள் எடுத்துரைக்கின்றனர்.

இது தவிர பே்பபர் கப் தயாரித்தல், சுற்றுலா வளர்ச்சித்துறையில் உள்ள வேலைவாய்ப்புகள், டெக்ஸ்டைல்ஸ், தகவல் தொழில்நுட்பத்துறை, சிறுதொழில் முனைவோருக்கான அரசு திட்டங்கள், உணவுப் பொருட்கள் பயன்படுத்துதல், சத்துணவு பொருட்கள் தயாரித்தல், ரீவைண்டிங், அலங்கார ஆடைகள் தயாரித்தல், பேட்டரி ரீசார்ஜ் செய்தல் போன்ற தொழில் பயிற்சிகள் குறித்தும் கருத்தரங்கம் நடைபெறுகிறது.

சொந்தமாக தொழில் தொடங்க விரும்பும் இளைஞர்களும், வியாபாரத் திறமைகளை வளர்த்துக் கொள்ள வேண்டுபவர்களும் இந்த கருத்தரதங்கில் கலந்து கொண்டு பயனடையலாம்.

நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக சுயதொழில் மதுரை 2013 கையேடு வெளியிடப்படுகிறது. இந்தக் கையேட்டில் தொழில் வழிமுறைகள், அரசு திட்டங்கள், உழைப்பால் உயர்ந்தவர்களின் வெற்றிக்கதைகள், தொழில் முனைவோருக்கான வங்கி திட்டங்கள், என பல்வேறு உபயோகரமான தகவல்கள் இடம்பெற்றுள்ளன.

கருத்தரங்கம் குறித்த மேலும் விபரங்கள் அறிய தொடர்பு கொள்க :
Puthiya Thalaimurai Foundation
No : 24, G.N., Chetty Road, T. Nagar, Chennai - 600017
Telephone : 044 - 28341219
Mobile : 87544 17500/ 87544 17338/ 87544 17308
like& share our page www.facebook.com/businessinfo

வங்கி கடன்

ஏதேனும் தொழில் தொடங்க வேண்டும் என்ற முயற்சியில் இறங்கும் பலர் பணப்பற்றாக்குறை காரணமாக சுவற்றில் அடித்த பந்து போல மீண்டும் பழைய நிலைமைக்கே வந்து விடுகின்றனர் .
அதனையும் மீறி வங்கியில் கடன் உதவி பெற்று தொழில் ஆரம்பிக்கலாம் என்றாலும் வங்கியின்அலைகளிப்பால் அந்த முயற்சியும் கை விட்டுவிடுகின்றனர் .
இன்று பிரமாண்டமான வெற்றியை பெற்றுள்ள பலரும் அன்று அவர்களின் நிறுவனத்தை ஆரம்பிக்க வங்கியில் கடன் பெற பட்ட கஷ்டங்கள் கொஞ்சமல்ல.
அவர்களின் கஷ்டங்கலோடு ஒப்பிடுகையில் இன்றைக்கு வங்கியில் கடன் பெறுவது எளிதான ஒரு விசயமே ... ஒரு வங்கியில் கடன் பெறுவது என்று முடிவெடுத்தவுடன் அதற்கான தயாரிப்புகளை நாம் தயாராக வைத்து கொள்ள வேண்டும்

தொழில்சம்பந்தப்பட்ட அறிவு:


ஒரு வங்கியில் கடன் பெற நாம் சென்ற உடனேயே அவர்கள் உங்களை உபசரித்து உடனே கடன் கொடுத்து விடுவார்கள் என்று நினைப்பது பெரும் தவறு.
வங்கியில் முதலில் தன்னம்பிக்கையை பரிட்சித்து பார்க்கும் வகையில் பல கேள்விகளை கேட்பார்கள்
நீங்கள் அதுவரை கஷ்டப்பட்டு தெரிந்து கொண்ட வியாபார யுக்திகள் அனைத்துமே பயன்தராது என்பது போல்தான் பேசுவார்கள் ......

சிலசமயம் வங்கி மேலாளர் தொழில்முனைவரின் உறுதியைக் குலைக்கும் வகையில் சில கேள்விகளைக் கேட்கவும் செய்யலாம்.

‘நீங்கள் சொல்கிற பிஸினஸை எனக்குத் தெரிந்த நபர் ஒருவர் செய்தார். அதில் அவருக்கு பலத்த நஷ்டம். வேறு ஏதாவது பிஸினஸுக்கான ஐடியா உங்களிடம் இருக்கிறதா?’ என வங்கி மேனேஜர் கேட்பதாக வைத்துக் கொள்வோம். இதற்கு தொழில் முனைவரின் பதில் என்னவாக இருக்கும்..? உடனே பதற்றமடையும் பலர், ‘சார், என்கிட்ட இன்னொரு பிஸினஸுக்கான ஐடியாவும் இருக்கிறது’ என்றுதான் சொல்வார்கள். இந்த ஒரு வரி பதில் போதும், உங்கள் தொழில் மீது உங்களுக்கு ஆழமான நம்பிக்கை இல்லை என்று சொல்ல. ஆனால், இத்தகைய பதில்களால் மட்டுமே ‘கடன் கிடைக்காது’ என்று சொல்லிவிட முடியாது. ஆனால், இது போன்ற சின்ன சின்ன விஷயங்கள் நீங்கள் செய்யப் போகிற தொழில் மீது உங்களுக்கு இருக்கும் உறுதியைக் காட்டிவிடும். எனவே தெளிவான பார்வை, உறுதியான திட்டம் தேவை.

ஆனால் எந்த ஒரு சூழ்நிலையிலும் உங்களது தன்னன்பிக்கையை கை விட்டு விடாதிர்கள். நீங்கள் எந்த ஒரு தொழிலை செய்ய முடிவெடுத்தாலும் அதனை பற்றிய அனைத்து விவரங்களை தெரிந்து வைத்து கொள்ளுங்கள் .

கடன் வகைகள் :


அடமானமில்லாத கடன் ( unsecured loan ) ரூபாய் 10 லட்சம் வரைக்குமான தொழில் கடனுக்கு எந்த விதமான அடமானமும் கேட்கக்கூடாது என்பது ஆர்.பி.ஐ. விதி. இந்த விதி காரணமாக, 10 லட்சம் வரை எந்தவித அடமானமில்லாமல் கடன் கிடைக்கும். ஒரு வேளை வங்கிகள் அடமானம் கேட்டால் அது விதியை மீறிய செயலாகவே கருத வேண்டும்

ஒரு வேளை வங்கிகள் அடமானம் கேட்டால் ஒவ்வொரு வங்கியும் ஆண்டுக்கு குறிப்பிட்ட தொகையை கடனாகக் கொடுக்க வேண்டும் என இலக்கு நிர்ணயித்து செயல்படுகின்றன. அந்த இலக்குக்காக போட்டி போட்டுக் கொண்டு வங்கிகள் கடன் தருகின்றன. ஆனாலும் தொழில் முனைவோருக்கு கடன் கிடைக்கவில்லை எனில் அதற்குக் காரணம், சரியான திட்டமிடல் இல்லாததுதான். உங்கள் தேவை ரூபாய் 25 லட்சம் எனில் அருகிலிருக்கும் வங்கிகளையே அணுகலாம். அவர்களே கடன் தருவார்கள். 25 லட்சத்துக்கு மேல் போகும் போது, ஒவ்வொரு வங்கியும் தொழில்கடன்களை ஊக்குவிக்கவே தனியாக சிறுதொழில் கிளையை ( SME Branch ) வைத்திருக்கிறார்கள். அங்கிருக்கும் அதிகாரிகளை அணுகினால் அவர்கள் உங்களுக்குத் தேவையான ஆலோசனைகளை வழங்குவார்கள்

கடனுக்கான ஆவணங்கள் :


அடையாளச் சான்றிதழ், முகவரிச் சான்றிதழ்,

பிஸினஸ் நடைபெறும் இடத்துக்கான முகவரிச் சான்றிதழ், திட்ட அறிக்கை, வருமான எதிர்ப்பார்ப்பு (கடனை திருப்பிச் செலுத்தும் காலம் வரைக்கும்), உள்ளாட்சி மற்றும் இதர அரசு அலுவலகங்களில் இருந்து தடையில்லாச் சான்றிதழ் (தேவைப்பட்டால்), பிஸினஸ் நடைபெறும் இடம் உங்களுடையது என்றால் அதற்கான சான்றிதழ் (அ) வாடகை இடம் என்றால் ஒப்பந்தச் சான்றிதழ் போன்ற ஆவணங்கள் கட்டாயம் கொடுக்க வேண்டும். இவை தவிர, வேறு என்னென்ன ஆவணங்கள் தேவை என்பது கடன் விண்ணப்பத்திலேயே இருக்கும். அவற்றையும் கொடுத்தால் நிச்சயம் உங்கள் கடன் மனுவை வங்கி அதிகாரிகள் ஒதுக்கித் தள்ள மாட்டார்கள்!

like & share our page www.facebook.com/businessinfo

Monday, 16 September 2013

பேப்பர் கப் மூலம் வருமானம் 

       அதிகரித்து வரும் சுற்றுச்சூழல் விழிப்புணர்வால் யாருக்கு அதிக பலன் என்று கேட்டால் கண்ணை மூடிக்கொண்டு சொல்லிவிடலாம், பேப்பர் கப் தயாரிப்பவர் களுக்கு என்று! டீ கடையில் ஆரம்பித்து, கல்யாண வீடு வரை தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துவிட்டது பேப்பர் கப்கள்.
       உங்களுக்கான அருமையான தொழில் வாய்ப்பை பேப்பர்கப் உருவா க்கித்தருகிறது. நடைமுறையில் யூஸ் அன் த்ரோ கப்களுக்கு அதிக மான தேவைகள் பெறுகிவிட்டது.
சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக் காமல் உங்கள் தரத்தை உயர்த்தி பேப்பர் கப் வியாபாரத்தை துவங்குங்கள்.
       உங்கள் வியாரத்தை தயாரிப்பில் மட்டுமே கவனம் செலுத்தினால் போதாது. அதை விற்பனைக்கு கொண்டு சென்று வெற்றிகரமாக விளம்படுத்துவதில் தான் உங்கள் நிறுவனத்திற்கென்ற லாபம் நிச்ச யிக்கப்படுகிறது.

       பெரும்பாலும் பேப்பர் கப் தயாரி ப்பில், திரவங்கள் பேப்பருடன் ஒட்டாமல் இருக்க மெழுகு பூசப் படுவதாகவும் அதனால் உடலு க்கு தீங்கு ஏற்படுவதாகவும் குற்றச்சாட்டுகள் உள்ளன. உங்கள் தயாரிப்பில் இதை முன்னிருத்தியும் கூட விளம்ப ரத்தை கொண்டு செல்ல லாம், கேடு விளைவிக்காத சூட்சுமத் தை தேடி கண்டுபிடியுங்கள். அதிக லாபத்தை எதிர்பார்த்து குறைந்த விளையில் தரமில்லாத பேப்பர்களை உபயோகிக்கும் போது உங்கள் நற்பெயர் கெட்டுவிட வாய்ப்பிரு க்கிறது.

      டிபார்ட்மென்ட் ஸ்டோர், பேக்கரி, பழமுதிர் நிலையம், ஐஸ்கிரிம் நிறுவனங்கள், உணவங்காடிகள் போன்ற இடங்களுக்கு நேரடியாக சென்று மொத்த ஆர்டர்களுக்கு சந்தைப்படுத்துங்கள்.

      கொஞ்சம் சமயோதிகமாக பேசத் தெரிந்தால் பெரிய நிறுவனங்களை நேரடியாக சந்தித்து, உங்கள் பொ ருள் பற்றிய தரத்தை அறிவித்து அவர்களது விளம்பரத்தை வாங்கி பேப்பர் கப்பின் வெளிப்புறத்தில் அச்சடித்து அதன்மூலம் கூட வருமா னத்தை பெறலாம்.
       உங்களால் நேரடியாக முதலீடு செய்ய முடியவில்லை என்றாலும் கவலைப்ப டாதீர்கள். உங்களுக்கு தெரிந்த அருகிலு ள்ள பேப்பர் தயாரிப்பாளர்களிடம் தொட ர்பு வைத்துக்கொண்டு நீங்களே வெளி யில் பெரிய நிறுவனங்களை அனுகி மேற் கண்டவாறு அவர்கள் விளம்பரத்தை கொண்டு செல்ல பேசியும் ஆர்டர் வாங்கி தயாரிப்பாளர்களிடம் கொடுத்து அதன் மூலம்
கனிசமாக லாபத்தையும் நல்ல அனுபவங்களையும் பெறலாம்.
       இத்தொழிலைத் தொடங்கும் முதலீட்டாளர் கள் கையிலிருந்து ஐந்து சதவிகிதத் தொகையை முதலீடு செய்தால் போதுமானது. மீதி 95 சதவிகித தொகையை வங்கிக் கடன் மூலம் பெற்றுக் கொள்ளலாம். குறைந்தபட்சம் ஆறரை லட்சம் ரூபாய் முதலீடாகக் கொண்டு இத்தொழிலைத் தொடங்கலாம்.

    தோராயமான திட்ட மதிப்பு படத்தில் காட்டப்பட்டுள்ளது


Sunday, 15 September 2013


கோழிப்பண்ணை மூலம் வருமானம் 

   
 


  நான் கடைசியாக கூறிய தொழில் பற்றிய தகவல்களை உங்களுக்கு சொல்கிறேன் . முடிந்தால் முயற்சி செய்து பயன்பெறுங்கள் தற்போது தமிழ்நாட்டில் சுகுணா , சாந்தி , சாமி போன்ற நிறைய கறிக்கோழி விற்பனை நிறுவனங்கள் உள்ளன .
       அவர்கள் அனைவரும் தாங்கள் விற்பனை செய்யும் கோழிகளை அவர்கள் மட்டும் உற்பத்தி செய்வதில்லைஅவ்வாறு செய்யவும் முடியாது.எனவே அவர்கள் சிறு விவசாயிகளுக்கு காண்ட்ராக்ட் அடிப்படையில் ஒரு தொழில் வாய்ப்பை ஏற்படுத்தி கொடுக்கின்றனர்
       அதாவது கோழிகளை வளர்ப்பதற்கு தேவையான குடில்கள் , தீவனம் மற்றும் குடிநீர் வைப்பதற்கான பிளாஸ்டிக் டப்பாக்கள் ஆகியவற்றை நாம் தயார் செய்து வைத்து
கொள்ள வேண்டும் பிறந்து சில மணிநேரங்களே ஆன கோழிக்குஞ்சுகள் மற்றும் அதற்கு தேவையான தீவணங்களை நிறுவனத்தில் இருந்து கொண்டு வந்து நமது கோழிவளர்ப்பு குடிலில் இறக்கி விடுவார்கள்,
       மேலும் அதனை பராமரிக்க தேவையான மருந்துகளையும் அதனை பயன்படுத்த ஒரு சூப்பர் வைசரையும் ரெடி செய்து விடுவார்கள் ....
ஒரு கோழியானது 2 முதல் 2.5 கிலோ வரை வளர 38 முதல் 40 நாட்கள் வரை ஆகும்
40 வது நாளில் நிறுவனத்தில் இருந்து வந்து , அதனை எடுத்து கொண்டு ஒரு கிலோவிற்கு ரூ.5 முதல் தருகின்றனர் ஒரு கோழியானது 2 கிலோ எனவே ஒரு கோழிக்கு நமக்கு ரூ.10 வரை கிடைக்கும்
       உதரணமாக நீங்கள் 6௦௦௦ கோழிக்குஞ்சுகளை வளர்த்து கொடுத்தால் 40 நாளில் ஒரு கோழிக்கு ரூ10 வீதம் மொத்ததமாக ரூ 60000 கிடைக்கும்.இதற்கு எந்த விதமான முன் அனுபமும் தேவை இல்லை
      அது மட்டுமில்லாமல் கோழி வளர்ப்பது ஒன்றும் பெரிய விசயம் இல்ல மேலும் இது சம்பந்த பட்ட உங்களது அனைத்து சந்தேகங்களையும் கேளுங்கள் சொல்கிறேன்
*வெற்றி நமதே*
         
எனக்கு தெரிந்த நண்பர் ஒருவர் விவசாயம் செய்து கொண்டு இருந்தார் . ஆனால் அதில் போதிய வருமானம் இல்லை . எனவே ஏதேனும் சிறுதொழில் செய்ய வேண்டும் என்று கூறினார் .... 
          நான் சேலம் நாமக்கல் பகுதியில் வேலை பார்த்த போது அங்கு உள்ள கோழிப்பண்ணைகளுக்கு சென்று சில தகவல்களை சேகரித்தேன் . எனவே அவற்றை எனது நண்பருக்கு கூறினேன் 
         இன்று அவரது வருமானம் மாதம் 40000 ற்கும் மேலாக உள்ளது..
 வருமானத்திற்கான வழி         

அன்று முதல் இன்று வரை நம்மிடையே பொதுவாக காணப்படும் பழக்கம் யாதெனில் , பள்ளியிலும் சரி வீட்டிலும் சரி "நல்ல படிச்சு நல்ல வேளைக்கு போ " என்பதுதான் .

         அது ஓரளவிற்கு சரி என்றாலும் அதுவே நமது வாழ்க்கைக்கு தேவையான அனைத்தயும் கொடுத்து விடுமா ? என்றால் அது கேள்வி குறியாக தான் உள்ளது

         இன்றைய பொருளாதார சூழ்நிலையில் நம்முடைய வருமானம் நமது தேவைகளை பூர்த்தி செய்யக்கூடிய அளவில் உள்ளதா ? அதற்கான பதில் பெரும்பாலும் "இல்லை" என்பது தான்

        எனவே, நமது தேவைகளை பூர்த்தி செய்து கொள்ளவும் வளமான வாழ்க்கையை வாழவும் வேண்டுமெனில் ஏதேனும் ஒரு தொழிலை செய்வதே சிறந்தது.

      ஆனால் அவ்வாறு தொழில் தொடங்க வேண்டுமெனில் , என்ன தொழில் செய்வது என்பது ஒரு பெரும் பிரச்சினையாக உள்ளது ...

      அந்த பிரச்சினைகளை உடைத்து உங்களுக்கு தொழில் சம்பந்த பட்ட விசயங்களை எனக்கு தெரிந்தளவில் கூறி பயனடைய செய்யும் நோக்கத்திலேயே இந்த பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது

உங்களில் யாருக்கேனும் ஏதேனும் தொழில்கள் பற்றி தெரிந்திருந்தால் அதனையும்  இங்கு நீங்கள் கூறலாம்
எல்லாருக்கும்  வணக்கமுங்க ............
          
                  சும்மா டைம் பாஸ் ஆகலங்க . அதனால ஒரு ப்ளாக் ஓபன் பண்ணி எனக்கு தெரிஞ்ச நாலு விசயத்த உங்களோட பகிர்ந்துகிலாம்னு இருக்கேங்க .

                

SPM KING