பேப்பர் கப் மூலம் வருமானம்
அதிகரித்து வரும் சுற்றுச்சூழல் விழிப்புணர்வால் யாருக்கு அதிக பலன் என்று கேட்டால் கண்ணை மூடிக்கொண்டு சொல்லிவிடலாம், பேப்பர் கப் தயாரிப்பவர் களுக்கு என்று! டீ கடையில் ஆரம்பித்து, கல்யாண வீடு வரை தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துவிட்டது பேப்பர் கப்கள்.உங்களுக்கான அருமையான தொழில் வாய்ப்பை பேப்பர்கப் உருவா க்கித்தருகிறது. நடைமுறையில் யூஸ் அன் த்ரோ கப்களுக்கு அதிக மான தேவைகள் பெறுகிவிட்டது.
சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக் காமல் உங்கள் தரத்தை உயர்த்தி பேப்பர் கப் வியாபாரத்தை துவங்குங்கள்.
உங்கள் வியாரத்தை தயாரிப்பில் மட்டுமே கவனம் செலுத்தினால் போதாது. அதை விற்பனைக்கு கொண்டு சென்று வெற்றிகரமாக விளம்படுத்துவதில் தான் உங்கள் நிறுவனத்திற்கென்ற லாபம் நிச்ச யிக்கப்படுகிறது.
பெரும்பாலும் பேப்பர் கப் தயாரி ப்பில், திரவங்கள் பேப்பருடன் ஒட்டாமல் இருக்க மெழுகு பூசப் படுவதாகவும் அதனால் உடலு க்கு தீங்கு ஏற்படுவதாகவும் குற்றச்சாட்டுகள் உள்ளன. உங்கள் தயாரிப்பில் இதை முன்னிருத்தியும் கூட விளம்ப ரத்தை கொண்டு செல்ல லாம், கேடு விளைவிக்காத சூட்சுமத் தை தேடி கண்டுபிடியுங்கள். அதிக லாபத்தை எதிர்பார்த்து குறைந்த விளையில் தரமில்லாத பேப்பர்களை உபயோகிக்கும் போது உங்கள் நற்பெயர் கெட்டுவிட வாய்ப்பிரு க்கிறது.
டிபார்ட்மென்ட் ஸ்டோர், பேக்கரி, பழமுதிர் நிலையம், ஐஸ்கிரிம் நிறுவனங்கள், உணவங்காடிகள் போன்ற இடங்களுக்கு நேரடியாக சென்று மொத்த ஆர்டர்களுக்கு சந்தைப்படுத்துங்கள்.
கொஞ்சம் சமயோதிகமாக பேசத் தெரிந்தால் பெரிய நிறுவனங்களை நேரடியாக சந்தித்து, உங்கள் பொ ருள் பற்றிய தரத்தை அறிவித்து அவர்களது விளம்பரத்தை வாங்கி பேப்பர் கப்பின் வெளிப்புறத்தில் அச்சடித்து அதன்மூலம் கூட வருமா னத்தை பெறலாம்.
உங்களால் நேரடியாக முதலீடு செய்ய முடியவில்லை என்றாலும் கவலைப்ப டாதீர்கள். உங்களுக்கு தெரிந்த அருகிலு ள்ள பேப்பர் தயாரிப்பாளர்களிடம் தொட ர்பு வைத்துக்கொண்டு நீங்களே வெளி யில் பெரிய நிறுவனங்களை அனுகி மேற் கண்டவாறு அவர்கள் விளம்பரத்தை கொண்டு செல்ல பேசியும் ஆர்டர் வாங்கி தயாரிப்பாளர்களிடம் கொடுத்து அதன் மூலம்
கனிசமாக லாபத்தையும் நல்ல அனுபவங்களையும் பெறலாம்.
இத்தொழிலைத் தொடங்கும் முதலீட்டாளர் கள் கையிலிருந்து ஐந்து சதவிகிதத் தொகையை முதலீடு செய்தால் போதுமானது. மீதி 95 சதவிகித தொகையை வங்கிக் கடன் மூலம் பெற்றுக் கொள்ளலாம். குறைந்தபட்சம் ஆறரை லட்சம் ரூபாய் முதலீடாகக் கொண்டு இத்தொழிலைத் தொடங்கலாம்.
தோராயமான திட்ட மதிப்பு படத்தில் காட்டப்பட்டுள்ளது
![]() |
Can you share your mail id
ReplyDeleteit would be helpful to discuss abt the projects.
My mail id: tamillselvan.ms@gmail.com
yes bro my id ; psmking@gmail.com
ReplyDelete