கோழிப்பண்ணை மூலம் வருமானம்
நான் கடைசியாக கூறிய தொழில் பற்றிய தகவல்களை உங்களுக்கு சொல்கிறேன் . முடிந்தால் முயற்சி செய்து பயன்பெறுங்கள் தற்போது தமிழ்நாட்டில் சுகுணா , சாந்தி , சாமி போன்ற நிறைய கறிக்கோழி விற்பனை நிறுவனங்கள் உள்ளன .
அவர்கள் அனைவரும் தாங்கள் விற்பனை செய்யும் கோழிகளை அவர்கள் மட்டும் உற்பத்தி செய்வதில்லைஅவ்வாறு செய்யவும் முடியாது.எனவே அவர்கள் சிறு விவசாயிகளுக்கு காண்ட்ராக்ட் அடிப்படையில் ஒரு தொழில் வாய்ப்பை ஏற்படுத்தி கொடுக்கின்றனர்அதாவது கோழிகளை வளர்ப்பதற்கு தேவையான குடில்கள் , தீவனம் மற்றும் குடிநீர் வைப்பதற்கான பிளாஸ்டிக் டப்பாக்கள் ஆகியவற்றை நாம் தயார் செய்து வைத்து
கொள்ள வேண்டும் பிறந்து சில மணிநேரங்களே ஆன கோழிக்குஞ்சுகள் மற்றும் அதற்கு தேவையான தீவணங்களை நிறுவனத்தில் இருந்து கொண்டு வந்து நமது கோழிவளர்ப்பு குடிலில் இறக்கி விடுவார்கள்,
மேலும் அதனை பராமரிக்க தேவையான மருந்துகளையும் அதனை பயன்படுத்த ஒரு சூப்பர் வைசரையும் ரெடி செய்து விடுவார்கள் ....
ஒரு கோழியானது 2 முதல் 2.5 கிலோ வரை வளர 38 முதல் 40 நாட்கள் வரை ஆகும்
40 வது நாளில் நிறுவனத்தில் இருந்து வந்து , அதனை எடுத்து கொண்டு ஒரு கிலோவிற்கு ரூ.5 முதல் தருகின்றனர் ஒரு கோழியானது 2 கிலோ எனவே ஒரு கோழிக்கு நமக்கு ரூ.10 வரை கிடைக்கும்
உதரணமாக நீங்கள் 6௦௦௦ கோழிக்குஞ்சுகளை வளர்த்து கொடுத்தால் 40 நாளில் ஒரு கோழிக்கு ரூ10 வீதம் மொத்ததமாக ரூ 60000 கிடைக்கும்.இதற்கு எந்த விதமான முன் அனுபமும் தேவை இல்லை
அது மட்டுமில்லாமல் கோழி வளர்ப்பது ஒன்றும் பெரிய விசயம் இல்ல மேலும் இது சம்பந்த பட்ட உங்களது அனைத்து சந்தேகங்களையும் கேளுங்கள் சொல்கிறேன்
*வெற்றி நமதே*
No comments:
Post a Comment