Tuesday, 17 September 2013

வங்கி கடன்

ஏதேனும் தொழில் தொடங்க வேண்டும் என்ற முயற்சியில் இறங்கும் பலர் பணப்பற்றாக்குறை காரணமாக சுவற்றில் அடித்த பந்து போல மீண்டும் பழைய நிலைமைக்கே வந்து விடுகின்றனர் .
அதனையும் மீறி வங்கியில் கடன் உதவி பெற்று தொழில் ஆரம்பிக்கலாம் என்றாலும் வங்கியின்அலைகளிப்பால் அந்த முயற்சியும் கை விட்டுவிடுகின்றனர் .
இன்று பிரமாண்டமான வெற்றியை பெற்றுள்ள பலரும் அன்று அவர்களின் நிறுவனத்தை ஆரம்பிக்க வங்கியில் கடன் பெற பட்ட கஷ்டங்கள் கொஞ்சமல்ல.
அவர்களின் கஷ்டங்கலோடு ஒப்பிடுகையில் இன்றைக்கு வங்கியில் கடன் பெறுவது எளிதான ஒரு விசயமே ... ஒரு வங்கியில் கடன் பெறுவது என்று முடிவெடுத்தவுடன் அதற்கான தயாரிப்புகளை நாம் தயாராக வைத்து கொள்ள வேண்டும்

தொழில்சம்பந்தப்பட்ட அறிவு:


ஒரு வங்கியில் கடன் பெற நாம் சென்ற உடனேயே அவர்கள் உங்களை உபசரித்து உடனே கடன் கொடுத்து விடுவார்கள் என்று நினைப்பது பெரும் தவறு.
வங்கியில் முதலில் தன்னம்பிக்கையை பரிட்சித்து பார்க்கும் வகையில் பல கேள்விகளை கேட்பார்கள்
நீங்கள் அதுவரை கஷ்டப்பட்டு தெரிந்து கொண்ட வியாபார யுக்திகள் அனைத்துமே பயன்தராது என்பது போல்தான் பேசுவார்கள் ......

சிலசமயம் வங்கி மேலாளர் தொழில்முனைவரின் உறுதியைக் குலைக்கும் வகையில் சில கேள்விகளைக் கேட்கவும் செய்யலாம்.

‘நீங்கள் சொல்கிற பிஸினஸை எனக்குத் தெரிந்த நபர் ஒருவர் செய்தார். அதில் அவருக்கு பலத்த நஷ்டம். வேறு ஏதாவது பிஸினஸுக்கான ஐடியா உங்களிடம் இருக்கிறதா?’ என வங்கி மேனேஜர் கேட்பதாக வைத்துக் கொள்வோம். இதற்கு தொழில் முனைவரின் பதில் என்னவாக இருக்கும்..? உடனே பதற்றமடையும் பலர், ‘சார், என்கிட்ட இன்னொரு பிஸினஸுக்கான ஐடியாவும் இருக்கிறது’ என்றுதான் சொல்வார்கள். இந்த ஒரு வரி பதில் போதும், உங்கள் தொழில் மீது உங்களுக்கு ஆழமான நம்பிக்கை இல்லை என்று சொல்ல. ஆனால், இத்தகைய பதில்களால் மட்டுமே ‘கடன் கிடைக்காது’ என்று சொல்லிவிட முடியாது. ஆனால், இது போன்ற சின்ன சின்ன விஷயங்கள் நீங்கள் செய்யப் போகிற தொழில் மீது உங்களுக்கு இருக்கும் உறுதியைக் காட்டிவிடும். எனவே தெளிவான பார்வை, உறுதியான திட்டம் தேவை.

ஆனால் எந்த ஒரு சூழ்நிலையிலும் உங்களது தன்னன்பிக்கையை கை விட்டு விடாதிர்கள். நீங்கள் எந்த ஒரு தொழிலை செய்ய முடிவெடுத்தாலும் அதனை பற்றிய அனைத்து விவரங்களை தெரிந்து வைத்து கொள்ளுங்கள் .

கடன் வகைகள் :


அடமானமில்லாத கடன் ( unsecured loan ) ரூபாய் 10 லட்சம் வரைக்குமான தொழில் கடனுக்கு எந்த விதமான அடமானமும் கேட்கக்கூடாது என்பது ஆர்.பி.ஐ. விதி. இந்த விதி காரணமாக, 10 லட்சம் வரை எந்தவித அடமானமில்லாமல் கடன் கிடைக்கும். ஒரு வேளை வங்கிகள் அடமானம் கேட்டால் அது விதியை மீறிய செயலாகவே கருத வேண்டும்

ஒரு வேளை வங்கிகள் அடமானம் கேட்டால் ஒவ்வொரு வங்கியும் ஆண்டுக்கு குறிப்பிட்ட தொகையை கடனாகக் கொடுக்க வேண்டும் என இலக்கு நிர்ணயித்து செயல்படுகின்றன. அந்த இலக்குக்காக போட்டி போட்டுக் கொண்டு வங்கிகள் கடன் தருகின்றன. ஆனாலும் தொழில் முனைவோருக்கு கடன் கிடைக்கவில்லை எனில் அதற்குக் காரணம், சரியான திட்டமிடல் இல்லாததுதான். உங்கள் தேவை ரூபாய் 25 லட்சம் எனில் அருகிலிருக்கும் வங்கிகளையே அணுகலாம். அவர்களே கடன் தருவார்கள். 25 லட்சத்துக்கு மேல் போகும் போது, ஒவ்வொரு வங்கியும் தொழில்கடன்களை ஊக்குவிக்கவே தனியாக சிறுதொழில் கிளையை ( SME Branch ) வைத்திருக்கிறார்கள். அங்கிருக்கும் அதிகாரிகளை அணுகினால் அவர்கள் உங்களுக்குத் தேவையான ஆலோசனைகளை வழங்குவார்கள்

கடனுக்கான ஆவணங்கள் :


அடையாளச் சான்றிதழ், முகவரிச் சான்றிதழ்,

பிஸினஸ் நடைபெறும் இடத்துக்கான முகவரிச் சான்றிதழ், திட்ட அறிக்கை, வருமான எதிர்ப்பார்ப்பு (கடனை திருப்பிச் செலுத்தும் காலம் வரைக்கும்), உள்ளாட்சி மற்றும் இதர அரசு அலுவலகங்களில் இருந்து தடையில்லாச் சான்றிதழ் (தேவைப்பட்டால்), பிஸினஸ் நடைபெறும் இடம் உங்களுடையது என்றால் அதற்கான சான்றிதழ் (அ) வாடகை இடம் என்றால் ஒப்பந்தச் சான்றிதழ் போன்ற ஆவணங்கள் கட்டாயம் கொடுக்க வேண்டும். இவை தவிர, வேறு என்னென்ன ஆவணங்கள் தேவை என்பது கடன் விண்ணப்பத்திலேயே இருக்கும். அவற்றையும் கொடுத்தால் நிச்சயம் உங்கள் கடன் மனுவை வங்கி அதிகாரிகள் ஒதுக்கித் தள்ள மாட்டார்கள்!

like & share our page www.facebook.com/businessinfo

No comments:

Post a Comment