இது பாஸ்ட் புட் காலம். நின்று கொண்டே சாப்பிட்டுவிட்டு, சாப்பிட்ட தட்டையும் கழுவுவதற்கு நேரமில்லாமல் தட்டின் மீது பிளாஸ்டிக் தாளை வைத்துச் சாப்பிட்டுவிட்டு ஓடிக்கொண்டிருக்கும் யுகம். சாப்பிட தட்டும் வேண்டும்; அது ஒருமுறை பயன்படுத்திவிட்டுத் தூக்கி எறிந்து விடுமாறும் இருக்க வேண்டும்; அது சுற்றுச் சூழலுக்கு கேடுவிளைவிக்காததாகவும் இருக்க வேண்டும். இந்த மூன்று தேவைகளையும் நிறைவேற்றுவதாக இருக்கிறது பாக்கு மட்டை தட்டுகள்.
வீணாகக் குப்பையில் போடப்பட்டு வந்த பாக்குமட்டையிலிருந்து, சுற்றுச்சுழலைப் பாதிக்காத இத் தட்டுகள் கோயில்களில் பிரசாதம் வழங்க, விசேஷங்களில் சிற்றுண்டிகள் வழங்க எனப் பெருமளவில் பயன்படுத்தப்படுகிறது. விளைவு? வீணான பொருள் விலைமதிப்புக்குரிய பொருளாக மாறிவிட்டது.
எவ்வளவு முதலீடு :
4 இயந்திரங்களின் விலை ரூ. 80 ஆயிரமாகும். சொந்த இடத்திலேயே இரு அறைகள் கட்டி இயந்திரத்தை அமைக்கலாம்.மாவட்டத் தொழில் மையத்தில் பதிவு செய்தேன். அதன்மூலம், சிறுதொழில் எனச் சான்று பெற்று, மின் கட்டணச் சலுகை பெறலாம் . இந்த இயந்திரம் வாங்குவதற்கும், மூலதனப் பொருள்கள் வாங்குவதற்கும் காதி போர்டு மூலம் கடன் பெற்றால், 35 சதம் மானியம் கிடைக்கும்.
இதில் பல ரகங்கள் உள்ளன. நான்கு அளவுகளில் தயாரிக்கலாம் . 10, 8, 6 மற்றும் 4 அங்குலங்களில் தட்டுகள் தயாரிக்கலாம் .
இதற்கான மூலப்பொருட்கள் சேலம் மற்றும் தென்காசியில் கிடைக்கிறது.
தட்டுகளை எப்படி சந்தைப்படுத்துதல்:
சேலத்தில் உள்ள கிரீன் இண்டியா என்ற நிறுவனம்தான் இந்தத் தொழில் குறித்து பயிற்சி அளிக்ககிறது. இந்த நிறுவனத்தார் மூலப்பொருள்களையும் கொடுத்து, தயாரிக்கப்பட்ட தட்டுகளையும் வாங்கிக் கொள்கின்றனர். இவர்கள் பல கண்காட்சிகளில் பங்குபெற்று சந்தைப்படுத்தவும் உதவி வருகின்றனர் .
like & share our page www.facebook.com/businessinfo
அவர்களின் முகவரி உங்கள் தொடர்புக்கு ;
green india
.(+91) 98434 11319
# 11-A Rajaji Road
Salem - 636 007.
greenindiasalem.com
நாளுக்கு நாள் இதன்தேவை கூடிக்கொண்டே போகிறது. சுயதொழில் செய்ய விரும்பும் பலர் இதனைச் செய்ய முன்வரவேண்டும். ஆண்கள் துணையின்றி வீட்டுப் பெண்களே செய்யக் கூடிய தொழில் இது.
இந்தத் தொழில் குறித்து உங்கள் கருத்து என்ன ? வருமானம் பெருக வாய்ப்புள்ள தொழில். . பெண்களுக்கு ஏற்ற தொழில். இந்தத் தொழிலில் ஈடுபட்டால், சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதில் நாமும் பங்குகொள்கிறோம் என்ற உணர்வு ஏற்படும்.
like & share our page www.facebook.com/businessinfo
பாக்குமட்டை தட்டு தயாரிப்பு:
பாக்கு மட்டையை தண்ணீரில் சிறிது நேரம் ஊறவைத்த பிறகு, அதை நவீன தொழில் நுட்பத்துடன் அமைக்கப்பட்ட இயந்திரத்தில் வைக்கப்படுகிறது. இயந்திரம் மின்சார உதவியுடன் வெப்பமாகி பாக்கு மட்டை தட்டாக உருவாகிறது.
வட்டம், சதுரம், செவ்வகம், ஐங்கோணம், அறுங்கோணம் ஆகிய வடிவங்களில் அச்சு முறையில் வடிவமைக்கப்படுகிறது. மிகவும் குறுகிய நேரத்தில் சாதாரணமாக 100 தட்டு வரை தயாரிக்கலாம். ஏற்கனவே புழக்கத்தில் இருந்த சதுர வடிவ தட்டுகள் மக்கள் மத்தியில் வரவேற்பை பெறவில்லை.
எனவே, உற்பத்தியாளர்கள் வடிவத்தை மாற்றி வட்ட வடிவத்திலும், அறுங்கோண வடிவத்திலும் மாற்றி விற்பனை செய்கிறோம். சீஸன் சமயத்தில் நாளொன்றுக்கு 3000 தட்டு வரை உற்பத்தி செய்யலாம். பாக்கு மட்டை உணவு தட்டுகளுக்கு வெளிநாடுகளிலும் நல்ல கிராக்கி மரத்தில் இருந்து உதிர்ந்து விழும் மட்டைகளை பதப்படுத்தி உணவுத் தட்டுகள் தயாரித்து விற்பனை செய்வதிலும் பாக்கு விவசாயிகள் ஆர்வம் காட்டினர். இதனால், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மட்டுமின்றி, வட மாநிலங்களிலும் பாக்கு தட்டுகளுக்கு மவுசு ஏற்பட்டது.
ஏற்றுமதிக்கு தொடர்ந்து ஆர்டர் கிடைத்ததால், பாக்கு தட்டு தயாரிக்கும் குடிசைத் தொழிலகங்களின் எண்ணிக்கை அதிகரித்தது. சேலம், நாமக்கல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பாக்கு தட்டு தயாரிக்கும் சிறு தொழில் அசுர வளர்ச்சி அடைந்தது. 400க்கும் மேற்பட்டோர் பாக்கு தட்டு தயாரிக்கும் தொழிலில் ஆர்வத்தோடு ஈடுபட்டனர்.
தற்போது பாக்கு தட்டுகள் மட்டுமின்றி, பாக்கு மட்டைகளை பதப்படுத்தி டீ கோப்பைகள், டம்ளர்கள், பல்வேறு வடிவ கிண்ணங்கள், சிற்றுண்டி பிளேட்டுகள் போன்றவற்றை தயாரிக்கும் புதிய முயற்சியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். இந்த பாத்திரங்களுக்கு ஆஸ்திரேலியா, ஐரோப்பிய நாடுகளில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
உள்ளூரில் உலா வந்த பாக்கு மட்டை தட்டுகளுக்கு, வளர்ந்த நாடுகளில் கடும் கிராக்கி ஏற்பட்டு ஏற்றுமதிக்கு ஆர்டர் குவிந்து வருவதால், விவசாயிகளும், வியாபாரிகளும் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
like & share our page www.facebook.com/businessinfo
பாக்கு மட்டை தட்டுகளின் செய்முறை :
பாக்குமட்டை தட்டுகள் நீங்கள் பார்த்துக்கொண்டிருக்கும் பாக்கு மரங்களின் மட்டைகளில் இருந்து தயரிக்கப்படுகிறது இவை முற்றிலும் இயற்கையான முறையில் தயாரிக்கப்படும் ஒரு பொருள் ஆகும் பாக்குமரங்களில் இருந்து மட்டைகள் மிகவும் கவனமாகப் பிரித்தெடுக்கப்பட்டு அவை சிறந்த கண்கணிப்புக்கு உட்படுத்தப்பட்டு சேமித்து பின் நன்னீரில் நனைத்து ஊறவைத்து அதனை முற்றிலும் மனிதர்களால் இயக்கப்படும் ஒரு எந்திரத்தில் வைத்து தேவையான அளவுகளில் வெட்டியும் பின் சுடச்செயதும் நமக்கு வேண்டிய வடிவத்தை தரும் வகையில் உருவாக்கபப்டுகிறது இதில் எந்தொரு இடத்திலும் செயற்கையான வண்ணங்களோ அல்லது மனமோ வேறு எந்த ஒரு ரசயனமோ இடப்படுவது இல்லை முற்றிலும் பணம் கொழிக்கும் பாக்குமட்டை தட்டு.இயந்திரங்கள் :
பாக்கு மட்டை தட்டுகளைத் தயாரிக்கும் இயந்திரங்களை உற்பத்தி செய்து, அவற்றை சந்தைப்படுத்தி வரும் சேலத்தின் மிகப் பிரபலமான எஸ்.பி.எஸ். இன்ஜினியரிங் நிறுவன உரிமையாளர்கள் கூறியதாவது:எமது நிறுவனம் 1997 லிருந்து இந்த பாக்கு மட்டைத் தட்டு தயாரிக்கும் இயந்திரம் உற்பத்தி செய்து சந்தைப்படுத்தி வருகிறது. நாங்கள் முதன் முதலில் பெடல் டைப் மெசினை செய்து பார்த்தோம். பிறகு ஹேண்டில் டைப் மெசினை அறிமுகம் செய்தோம்.பலர் கேட்டதால் ஆட்டோ மெசினை சேலத்தில் முதன் முதலாக அறிமுகப்படுத்தினோம். தற்போது தானாக இயங்கக்கூடிய ஆட்டோமெடிக் இயந்திரம் அறிமுகம் செய்துள்ளோம். இந்த ஆட்டோமேட்டிக் இயந்திரத்தை தமிழகத்தில் முதன் முறையாக நாங்கள் வடிவமைத்து சந்தைப்படுத்தியுள்ளோம். இந்த இயந்திரத்தில் பாக்கு மட்டையை வைத்து பட்டனை அழுத்தினால், தானாகவே இயங்கி தட்டு வடிவம் ஆனவுடன் தானாகவே இயங்கி தட்டுகள் வெளிவந்து விடும். மற்ற இயந்திரத்தை விட தட்டுகளை அழகாகவும், நேர்த்தியாகவும், விரைவாகவும் உற்பத்தி செய்யலாம்.
ஏற்றுமதி தரம் வாய்ந்த தட்டுகளாகவும், விருப்பத்திற்கேற்றவாறு லோகோ, போன், டிசைன் போன்றவற்றை எம்போசில் செய்யும் வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் உள்ள ஹீட்டர்களுக்கு டிஜிட்டல் டெம்ப்ரேச்சர் இண்டிகேட்டர் பொருத்தப்பட்டுள்ளதால் எவ்வளவு வெப்பம் வைக்கலாம் என்று உறுதி செய்யலாம். குறைந்த மின் செலவே போதுமானது. புதிதாக தொழில் தொடங்குவோருக்கு இந்த இயந்திரம் ஒரு வரப்பிரசாதம்.
எஸ்.பி.எஸ். இன்ஜினியரிங் ஒர்க்ஸ், சேலம்-8, மொபைல்97906 98985, 97912 03708 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.
****************வெற்றி நிச்சயம்********************
like & share our page www.facebook.com/businessinfo
good sir.
ReplyDeleteI am interested this businus
9865758801
call me sir
automatically machine i want. call me
ReplyDeleteGranted sir.
ReplyDeleteI'm all so interested that.pls replay sir
Call me sir 6382488829
ReplyDeleteI want areca leaf machine.... Please send details... I'm in Namakkal.. please contact this is my number 9865850633
ReplyDelete